JobVibe.lk - Sri Lanka Job Portal

மூத்த ஆலிம் எம்.எம்.எம். முபாறக் (மதனி) அவர்களுக்கு இறைவன் உயர்ந்த கூலிகளை வழங்க பிராத்திக்கிறேன் : ஹரீஸ் எம்.பி இரங்கல்.

அபூஹின்சா

இலங்கை முஸ்லிங்களின் முக்கிய அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், தற்போதய பொதுச் செயலாளரும், மகரகம கபூரிய்யா அறபுக்கல்லூரியின் அதிபருமான  எமது நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவர் அல்ஹாஜ் அஷ்ஷைய்க் எம்.எம்.எம்.முபாறக் (மதனி) ஹஸ்றத் அவர்கள் இன்று வபாத்தானார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்) எனும் செய்தி என்னை வந்தடைந்தபோது மிகவும் கவலையாக இருந்தது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வனுதாப செய்தியில் மேலும்

சிறந்த மார்க்க அறிஞராக இருந்து பல ஆலிம்களையும், மார்க்க அறிஞர்களையும் தலைமை கொடுத்து வழிகாட்டிய அன்னாரின் சேவை மிகப் பெரிதாக இக்கட்டான காலப்பகுதிகளில் அமைந்திருந்தது. மார்க்கப்பணிகளை சிறப்பாக செய்தது மட்டுமின்றி மகரகம கபூரிய்யா அறபுக்கல்லூரியின் அதிபராக இருந்து பல மௌலவிக்களை உருவாக்கிய ஒருவர் இன்று எம்மை விட்டு பிரிந்திருக்கிறார்.

அன்னார் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அவரின் சமூக பணிகளையும் மார்க்க பணிகளையும் இறைவன் பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்கிட இருகரம் ஏந்தி பிராத்திக்கிறேன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உலமாக்கள், குடும்பத்தார்கள், அவரின் நண்பர்கள், முஸ்லிங்கள் எல்லோருக்கும் இறைவன் திடமான இதயத்தை வழங்கிட என்னுடைய பிராத்தனைகள் என தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال