எம்.யூ.எம்.சனூன்
முறையான திட்டமிடலுடனும், தெளிவான அபிவிருத்தி இலக்குகளுடனும் துரித முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் புத்தளம் மாநகரத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் கருத்திற்கொண்டு, மத்திய அரசின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றுமொரு முக்கிய அங்கீகாரத்தை புத்தளத்துக்கு வழங்கியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நகர அபிவிருத்திப் பிரிவினால், பிராந்திய பௌதீக அபிவிருத்தித் திட்டமிடல் குழுவின் உறுப்பினராக புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் எம். எப். ரின்சாத் அஹமட் அவர்கள் மூன்று வருட காலத்திற்கு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த புத்தளம் மக்களுக்கும் கிடைத்த கௌரவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாருங்கள் புத்தளத்திற்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்" என்று மக்கள் விரும்பும் நகராக புத்தளத்தை மாற்றியமைப்போம். அவர் தானே.😁😁😁😁
ReplyDelete