புத்தளம் மாவட்டம், வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆர். என். அசனா மரிக்கார் காலமான செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் 1997 முதல் 2001 வரையும், 2006 முதல் 2010 வரையும் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தவிசாளராகவும், வேறு சந்தர்ப்பங்களில் அதன் உறுப்பினராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
புத்தளத்திற்கு சென்றிருந்த போது, அவரது ஊரில் வீட்டில் சந்தித்து, சுகம் விசாரித்து ஆறுதல் கூறி விட்டு வந்திருந்தேன். அன்னாரின் மறைவு குறிப்பாக பிரதேச மக்களுக்குப் பேரிழப்பாகும்.
அல்லாஹ் அன்னாரது மார்க்கப்பற்றையும், நற்செயல்களையும் உவந்தேற்றுக் கொண்டு, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவனபதியை வழங்கி அருள பிரார்த்திக்கிறேன்.
அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பிரதேச மக்களுக்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

