JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இந்து மகா சபையில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன்

சிங்கப்பூர் சன் லவ் ஹோம் நிறுவனமும், புத்தளம் இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் தா.முருகேசம்பிள்ளையினதும் ஏற்பாட்டில், இன்னும் சில சாயி சமித்தி அங்கத்தவர்களின் பங்களிப்புடன் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் பிறந்த நாள் விழா திங்கட்கிழமை (23) மாலை 6.30 மணியளவில் புத்தளம் இந்து மகா சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் புத்தளம் இந்து மகா சபை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாயி பஜனை என்பன இடம்பெற்றன.

அத்தோடு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படும் பரிசுப் பொருட்கள் சுமார் 70 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதன்போது நிகழ்வில் பங்கு பற்றிய 130 பேருக்கு இராப்போசனமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இந்து மகா சபையின் தலைவர் நிர்மலன், செயலாளர் என்.திருச்செல்வம் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றார்களும் கலந்து சிறப்பித்தனர்.












Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال