எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான இஸட் டியூட்ஸ் (2003 சா/த. , 2006 உ/த) அணியினரால் அண்மையில் புத்தளம் ஐஸ் டொக் உணவு விடுதியில் விஷேட கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள், மூன்று தடவை தேசிய மட்டத்தில் சீனடிக்கலையில் சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்தமைக்காக அதன் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.எம்.சுபியான் கௌரவிக்கப்பட்டார்.
அதுபோல் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய இஸட் டியூட்ஸ் அணியினரின் பிள்ளைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வானது இஸட் டியூட்ஸ் அணி நிர்வாக குழுவின் ஏற்பாட்டில் அதன் உப தலைவர் ஆசிரியர் எம்.என்.எம்.சரீக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.







