JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம் பெற்ற அமைதி ஆர்பாட்டம்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில்  கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (23) அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இவ் அமைதி ஆர்பாட்டத்தில் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர். 

2027 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் இப் பகுதியில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அதே நேரம் ஏனைய பதவிகளில் இருக்கும் அரச ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு வரவு செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுவதுடன் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 25 ஐயாயிரம் ரூபாய் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சம்பள அளவுத்திட்டம் எம் என் 04 இருந்து எம் என் 05 க்கு சம்பள சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை  முன்னிறுத்தியே மேற்படி அமைதியான ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال