JobVibe.lk - Sri Lanka Job Portal

முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவு: காத்தான்குடியில் கோலாகலமாக ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (22) கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கும், போட்டிகளின் வர்ணனையாளர்கள் மற்றும் நடுவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கட்சியின் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மற்றும் பெருந்திரளான இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இச்சுற்றுப்போட்டி, இளைஞர்களிடையே விளையாட்டுத்துறை ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال