எம்.யூ.எம்.சனூன்
குருணாகல், நுககஹகெதர, பஹமுணே பகுதியில் அமைந்துள்ள நூரானியா முஸ்லிம் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் “Grade 5 Scholarship Awarding Ceremony 2026” விருது வழங்கும் விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 70 மாணவர்கள் பதக்கங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அதிபர் மற்றும் தரம் ஐந்துக்குப் பொறுப்பான ஆசிரியர் திருமதி எம்.என்.எப்.சிஹானா ஆகியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குருணாகல் கல்வி வலயத்தின் கிரியுல்ல வலயக் கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.பைஸ் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக ஊடகவியலாளர் ஏ.டபில்யூ.எம். பஸ்லான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். எப்.என்.மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உரிமையாளரும், சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளின் குருணாகல் மாவட்ட நிருபருமான பஸ்லான், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குளோபல் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளராகவும் கடமையாற்றுவதோடு சமூக மனிதநேயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி, எதிர்காலத் தலை முறையினரை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா, கல்வி மற்றும் சமூக ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது.







