(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை திறந்த பல்கலைக்கழகம், வவுனியா கற்கை நிலையத்தின் மாணவர்களின் ஏற்பாட்டில் "பாதச்சுவடு 2026" எனும் பெயரில் ஒரு நடைபவணி ஒன்று வவுனியா பிராந்தியத்தை சுற்றி இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பதாகைகளை சுமந்த வண்ணம், ஒற்றுமையுடன் நடைபவணியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா கற்கை நிலையத்தின் Center Manager k பிரசனன் B.Ed மற்றும் PGDE Coordinator இன்பதேவரஜா ஊழியர்கள் மற்றும் ஒவ்வொரு கற்கை நெறியையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.
இந்த நடைபவணி இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது. மாணவர்களிடையே ஒற்றுமையையும் ஒன்றியத்தையும் வலுப்படுத்துவது மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம், வவுனியா கற்கை நிலையத்தை சமூகத்தில் வெளிப்படுத்துவது என்பனவாகும்
மாணவர்களின் உற்சாகமான பங்குபற்றுதலுடன் இந்த நடைபவணி வெற்றிகரமாக நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.



