JobVibe.lk - Sri Lanka Job Portal

தித்வா புயலால் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான நான்காம் கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயலால் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவில் முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான நான்காம் கட்ட காசோலைகளை வழங்கும் நிகழ்வு (13) செவ்வாய்க்கிழமை கல்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தேசிய மக்கள் சக்தியின், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச செயலாளர் டீ.ஏ.பிரியதர்ஷினி, கல்பிட்டி பிரதேச சபையின் தலைவர் ஏ.எஸ்.எம்.றிகாஸ், கல்பிட்டி அமைப்பாளர் சஞ்சீவ மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் தித்வா புயலால் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவில் சேதமடைந்த வீடுகளுகளின் பயனாளிகளும், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.














Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال