(அபூ உபைத்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்கல்விப் பிரிவுக்கு தற்காலிக ரீதியில் கடமை புரிகின்ற Acting Director யை அப்பொறுப்பிலிருந்து நீக்குமாறும், வேறு ஒரு திறமையானவரை நியமிக்குமாறும் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த சில வருடங்களாக உடற்கல்விப் பிரிவில் நடைபெறுகின்ற ஊழல்கள், விளையாட்டுப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் இடம்பெறுகின்ற முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகள், பொய்யான வாக்குறுதிகள், ஏமாற்றுக்கள், விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆற்றல் இல்லாமை போன்ற பல விடையங்களை மாணவர்கள் சுட்டிக்காட்டி குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த தற்காலிக பணிப்பாளரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









