JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருதில் இடம்பெறும் இன்றைய கிழக்கின் கலைச்சங்கமம நிகழ்வில் "நகைச்சுவையும் மிமிக்கிரி நிகழ்வும்"

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்முனை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் நடாத்தும் "கிழக்கின் கலைச்சங்கமம்" நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறுகிறது.

இன்றைய வியாழக்கிழமை நிகழ்வில், மாலை 06.30 க்கு அகரம் துஜி கலந்து கொள்ளும் "வாங்க சிரிக்கலாம்" சிறப்பு நிகழ்ச்சியும் தயிர்ச்சட்டி நஜாத் பங்கு பற்றும் நகைச்சுவையுடன் கூடிய மிமிக்கிரி நிகழ்வு இன்று இரவு 07.30 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அவர்களது தலைமை மற்றும் வழிகாட்டலில் இடம்பெறும் இவ்விழாவில், விரும்பியவர் யாரும் இந்நிகழ்வுகளைக்  கண்டுகளிக்கலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال