(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் ஏற்பாட்டில் இலவச சட்ட உதவி நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 2026 நவம்பர் 01ம் மற்றும் 02 ம் திகதிகளில் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் அலுவலகத்தில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா முகைதீன் தலைமையில் இடம்பெற உள்ளது
நீண்ட கால அனுபவம் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணிகளால் நடாத்தப்பட்ட உள்ள இவ் இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் நிக்காஹ் நடைபெற்று இதுவரை திருமணபதிவை மேற்கொள்ளாதவர்களுக்கான சட்ட உதவி, பிறப்பு சான்றிதழ் இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கான சட்ட உதவி மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் தாபரிப்பு வழக்குகள் தொடர்வதற்கான சட்ட உதவிகள் என பல்வேறு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இவ் இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் பங்குபற்றுபவர்கள் 2026/10/31 ம் திகதிக்கு முன் 0777284058 மற்றும் 0771201101 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
