JobVibe.lk - Sri Lanka Job Portal

கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய "முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள்" எனும் நூல் பொது நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

யாழ் நகரை சேர்ந்த கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய "முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள்" எனும் நூல், புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாநகர சபை பொது நூலகத்தின் பிரதி நூலகர் எம்.எச். றிஸ்வானியா அவர்களிடம் நூலாசிரியர் கலாபூஷணம் பரீட் இக்பால் இந்த நூலினை அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

யாழ் மண்ணில் அரசியல், கல்வி,  மற்றும் சமூக பொது துறைகளில் சாதித்து, காலஞ்சென்ற 43 முக்கியஸ்த்தர்களின்  வரலாற்றினை எடுத்தியம்பும் விதமாக, அவர்களின் புகைப்படங்களை உள்ளடக்கியவாறு இந்த நூல் உருவாக்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال