JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவி எம்.என்.ஸைனப் இஸ்லாமிய கலாசார கிராஅத் போட்டியில் முதலாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கஜுவத்தை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவியான எம்.என்.ஸைனப் அண்மையில் இடம்பெற்ற வலய மட்ட இஸ்லாமிய கலாசாரப் போட்டி நிகழ்வுகளில் கிராஅத் போட்டியில் முதலாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

பாடசாலக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவி, ரெட்பானாவைச் சேர்ந்த நதீர் மௌலவி அவர்களின் மகளாவார். 

இவர் மாகாண மட்டத்திலும் முதலிடம் பெற்று தேசிய ரீதியிலும் பிரகாசிக்க வேண்டும் என அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال