JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய அளவில் பேசப்பட்ட பிரமாண்டமான பெருவிழா: ஹிஸ்புல்லாஹ்வின் காலத்தால் அழியாத சேவையும், தடம் பதித்த வரலாறும்.!

காலங்கள் கடந்தாலும், உண்மையான தலைவர்களின் மக்கள் சேவை காலத்தால் அழியாமல் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதற்கு இது ஒரு வரலாற்றுச் சான்று.

இன்றிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, அதாவது 1995 அக்டோபர் 14 அன்று 'வீரகேசரி' நாளிதழில் வெளிவந்த வரலாற்றுச் செய்தி இது.

1990களில் ஏற்பட்ட பேரிடர்களால் கடுமையாகச் சேதமடைந்து, கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப் போயிருந்த ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் மீள் எழுச்சிக்காக,  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது தொலைநோக்குச் சிந்தனையால் முன்னெடுத்த மகத்தான சாதனை.

சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் (அக்காலகட்டத்தின் மிகப்பெரிய நிதிப் பெறுமதி), வட-கிழக்கு மாகாணத்திலேயே மிக நீளமான மூன்று மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டடத் தொகுதியாகவும், சுமார் 25 வகுப்பறைகள் மற்றும் நவீன ஆய்வூட வசதிகளுடனும் இக் கல்விக்கூடம் உருவாக்கப்பட்டது.

அக்காலத்தில் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகவும், வியந்து பாராட்டப்பட்ட ஒரு முன்மாதிரி அபிவிருத்தித் திட்டமாகவும் இது திகழ்ந்தது. 

அன்றைக்கு விதைக்கப்பட்ட அந்த அறிவு விதை, இன்று எத்தனையோ தலைமுறைகளை உருவாக்கிக் கம்பீரமாக நிற்கிறது என்றால், அதன் பின்னணியில் நமது ஹிஸ்புல்லா அவர்களின் அயராத உழைப்பும், கல்வி மீது அவர் கொண்டிருந்த எல்லையற்ற பற்றுதலுமே மூலதனமாகும்.

அன்றும் - இன்றும் - என்றும் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவே தனது வாழ் நாளை அர்ப்பணித்து வரும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழியாத சேவையை இந்த நல்ல வேளையில் பெருமையுடன் நினைவுபூர்வமாகப் பதிவிடுகிறோம்.


(எஸ். சினீஸ் கான்)




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال