JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தில்லையடி பாடசாலையில் மாணவர் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு...!.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களைக் கௌரவித்து, அவர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் எஸ்.பர்ஜானா தலைமையில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டார்.

புத்தளம் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் அதிகாரி எச்.பீ.என்.குலதுங்க, புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, மாணவர் தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு, சின்னங்கள் அணிவிக்கப்பட்டதுடன், அவர்களின் தலைமைத்துவப் பண்புகளையும், பொறுப்புணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.



















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال