(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளருமான எஸ் எச் எம் நியாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11) பாலாவியில் இடம்பெற்றது
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் .பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் கலந்து சிறப்பித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் பெண்களின் வாழ்வாதார மற்றும் உரிமைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது










