JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையின் பங்களிப்புடன் மீனவர்களுக்கு முதலுதவிப் பயிற்சித் திட்டம் கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நடத்தும் முதலுதவி குறித்த மீனவ சமூகத்தை வலுவூட்டும் பயிற்சித் தொடரின் மற்றுமொரு பயிற்சிப் பட்டறை, தெற்கு கடற்படைத் கட்டளையின் மருத்துவக் குழுவின் பங்களிப்புடன், புதன்கிழமை (2026 ஒக்டோபர் 07) கிரிந்த மீன்பிடி துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

அதற்கமைய, அடிப்படை உயிர் ஆதரவு (Basic Life Support), மனநல நல்வாழ்வு, கடலில் மீனவ சமூகத்தினருக்கு ஏற்படக்கூடிய விபத்துகளின் போது கரையை அடையும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை நோயாளிகளுக்கு முதலுதவி வழங்குதல் மற்றும் அவ்வாறான அவசர நிலைமைகளை நிர்வகித்தல் தொடர்பில், மீனவ சமூகத்தினருக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறை ரீதியான பயிற்சிகள் இம்முதலுதவிப் பயிற்சிப் பட்டறையின்போது வழங்கப்பட்டன. மேலும், இப்பயிற்சியில் கலந்துகொண்ட மீனவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال