JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

எம்.யூ.எம்.சனூன்

குருநாகல் சாஹிரா கல்லூரி மாணவர்கள், குருநாகல் பொது நூலகத்தால் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட விவாத போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா குருநாகல் நகர மண்டபத்தில் அண்மையில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. 

இதன் போது சான்றிதழ்களுடன், பரிசு பொதிகளுக்கான வவுச்சர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை சிறப்புக்குரிய விடயமாகும். 

மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியைகளான எம்.எஸ்.எப்.சப்னா, எம்.டீ.எப்.சிஹானா, எம்.எச்.எப்.ரஸானா மற்றும் அதற்காக உதவி புரிந்த கே.சாந்தகுமாரி, கீதானி உள்ளிட்ட சகல ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال