(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி புத்தளம் பிரதான வீதியில் கண்டக்குடா பள்ளிவாசலுக்கு முன்னாள் வியாழக்கிழமை (15) இரவு 7 மணியளவில் வீதியை கடக்க முற்பட்ட மௌலவி மின்ஹாஜ் வயது 34 இரு பிள்ளைகளின் தந்தை வேன் மோதி ஸ்தலத்தில் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
இது பற்றி மேலும் தெரியவருவதாவது
வவுனியாவைச் சேர்ந்த மௌலவி மின்ஹாஜ் வயது 34 இரண்டு பிள்ளைகளின் தந்தை கண்டக்குடாவில் திருமணம் முடித்துள்ளதாகவும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றவர் எனவும் விபத்து சம்பவம் இடம்பெற்ற வேலை பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுது விட்டு வீட்டிற்கு செல்வதற்கு பிரதான வீதியை கடக்க முற்பட்ட வேளை புத்தளம் பக்கமாக இருந்து வேகமாக வந்த வேன் ஒன்று மௌலவியை மோதி உள்ளதுடன் வீதியில் விழுந்த மௌலவியின் தலையில் பலமாக அடி விழுந்துள்ளதுடன் சம்பவ இடத்திலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
குறித்த வேன் ஆனமடுவை பகுதியைச் சேர்ந்தது எனவும் கண்டக்குழியில் உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்கு வருகை தந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆன மடுவில் இருந்து கண்டக்குளிக்கு கலியான வீடு செல்வது என்றால் வேணில் இருந்தவர்கள் நல்ல தண்ணியாக இருக்கும்
ReplyDelete