இன்றைய சுயவிளம்பர அரசியலில், ஒரு சிலருக்கு உதவியை வழங்கிவிட்டு அதை ஊடகங்களில் பிரம்மாண்டமாகக் காட்டித் தம்பட்டம் அடிக்கும் மனிதர்களைத் தான் நாம் பார்க்கிறோம். ஆனால், எவ்வித ஆரவாரமும் இன்றி, இறைவன் பொருட்டு மாத்திரம் தனது சொந்த முயற்சியால் சுமார் 500 ஏழை இமாம்கள் மற்றும் முஅத்தின்களின் பாதங்களில் புனித உம்ரா வாய்ப்பைச் சமர்ப்பித்தவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்..
வாழ்நாள் முழுதும் சமூகத்திற்கு மார்க்க சேவை செய்தும், வசதியின்மையால் புனித கஃபாவை நேரில் தரிசிக்க முடியாமல் நெஞ்சுக்குள் ஏங்கிய அந்த எளிய ஆன்மீக பணியாளர்களின் கண்நீரைத் துடைத்து, அவர்களின் பேராவலை நனவாக்கிய அந்த ஈமானியக் கருணை வார்த்தைகளுக்குள் அடங்காதது.
ஒரு உண்மையான தலைவன் மக்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல, அவர்களின் ஆன்மீகத் தாகத்தையும், நெஞ்சக் கனவுகளையும் தொட்டறிய வேண்டும் என்பதற்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இந்த நற்பணி ஒப்பற்ற சான்றாகும். மார்க்க அறிஞர்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்காமல், அவர்களைத் தேடித்தேடி கௌரவித்து, இறைவனின் இல்லத்திற்கு அனுப்பி வைத்த அந்த உன்னதமான உள்ளம் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.
அரசியல் கடந்து, மக்கள் மனங்களில் என்றும் சிம்மாசனமிட்டு வாழும் இத்தகைய தலைவனின் ஆன்மீகச் சேவையும் மனிதநேயமும் காலமெல்லாம் சமூகத்தின் நெஞ்சங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
(எஸ். கே)
