(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ரஷ்யா கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை (16) கற்பிட்டி வன்னிமுந்தல் உள்ளக விளையாட்டரங்கில் அதிபர் எம் ஜே என் பாஹீமா தலைமையில் நடைபெற்றது.
இவ் விளையாட்டு போட்டி நிகழ்வின் அதிதியாக, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் கலந்து சிறப்பித்தார்.
கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 16 வருடங்களாக இஸ்லாமிய பாலர் பாடசாலையை வெற்றிகரமாக நடாத்தி வரும் ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா மற்றும் ஆசிரியர்களான ஏ.சீ யசினத் பானு, எம்.ஆர் றஹ்னா, ஜே.கே ஜெஸானா, எம்.ஐ ஆகிலா ஆகியோரின் விடா முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த இஸ்லாமிய பாலர் பாடசாலை வளர்ச்சி பாதையில் செல்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும் என்பதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட சகல பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிகளை திறம்பட கற்பிட்டி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் அஸ்கர் தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
















