(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டியில் பெண்களுக்கான தையல் மற்றும் கேக் வகை உற்பத்திகளை முறையாக கற்றுக் கொள்வதற்கான அங்கிகரிக்கப்பட்ட ஒரு கல்வியகம் இல்லாத குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக கற்பிட்டியில் ஆடிசன் எகடமி (ARTISON ACADEMY) கல்வியகம் வெள்ளிக்கிழமை (16) புதிதாக திறந்து வைக்கப்பட்டது
ஆடிசன் எகடமி கல்வியகத்தின் பணிப்பாளர் எம் எப் எம் பௌகான் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் கற்பிட்டி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ ஜே எம் தாரிக் கலந்து சிறப்பித்தார்.
பெண்களுக்கு முறையான கற்பித்தல் மூலம் சுய தொழில் வாய்ப்புக்களை கற்பிட்டியில் உருவாக்கும் நோக்கோடு திறமையும் தகுதியும் கொண்ட ஆசிரியர் ஜே.எப் றிஸ்னாவினால் மேற்படி பெண்களுக்கான தையல் மற்றும் கேக் வகைகளின் உற்பத்திகள் பயிற்றுவிக்கப்பட உள்ளதாக ஆடிசன் எகடமியின் முகாமையாளர் ஏ.கே.எஸ் பானு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.





