JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி தில்லையடி கிராமத்தில் இடம்பெற உள்ள இஸ்லாமிய கலாசார நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தில்லையடி கிராமத்தில் தில்லையடி தாருல் அர்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் இணைந்து தில்லையடி மற்றும் தேத்தாவாடி ஆகிய கிராம மக்களின் பங்களிப்புடன் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இஸ்லாமிய கலாசார நிகழ்வு தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (02) ஜூம்ஆ தொழுகையை அடுத்து பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம். ரீ.எம் றிப்கான் (றஹ்மானி) தலைமையில் இடம்பெற்றது.

இதில் தில்லையடி பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் அன்வர்தீன் தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ் எச் அரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கற்பிட்டியின் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான தில்லையடி கிராமத்தின் வரலாற்று சிறப்புக்களை எடுத்து கூறும் வண்ணம் பாடசாலையும் பள்ளிவாசலும் இணைந்து ஊர் மக்களின் பங்களிப்புடன் சிறப்பான ஒரு இஸ்லாமிய கலாசார நிகழ்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال