JobVibe.lk - Sri Lanka Job Portal

விசேட தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு அரசாங்க நிதி உதவியுடன் புதிய வீடு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தில்லையடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் விசேட தேவையுடைய ஒரு குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் அமைப்பதற்காக வேண்டி (16) வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம்.பைசலினால் அடிக்கல் நடப்பட்டது. 

அங்கவீனமுற்றவர்களுக்காக தேசிய செயலகத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தெரிவு செய்யப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன், சமூக அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர் இல்பா, தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال