JobVibe.lk - Sri Lanka Job Portal

அம்மாதோட்டம் கிராமத்தில் உலக உணவு தினம் தொடர்பான இளைஞர்களுடனான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

உலக உணவு தினத்தினை முன்னிட்டு  உணவு வாரத்தை புத்தளம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி அம்மாதோட்டம் பாலர் பாடசாலையில் சனிக்கிழமை (10) நெப்ஸோவின் புத்தளம் மாவட்ட செயற்பாட்டாளர் எம் பி.எம் ஹிஜாஸ் தலைமையில் நெப்ஸோவின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே பத்மநாதனின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது. 

இன்றைய இளைஞர்கள் மத்தியில் மீனவ மற்றும் விவசாய சமூகம் தொடர்பான தெளிவின்மையே காணப்படுகின்றது இந்த நிலையை  மாற்றி இளைஞர்களை மீனவ மற்றும் விவசாய சமூகங்களுடன் ஒன்றிணைத்து நவீனத்துவத்துடன் கூடிய ஒரு முழுமையான படைப்பாளியாக இவ் இளைஞர்களை உருவாக்குவதை நோக்காக கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال