JobVibe.lk - Sri Lanka Job Portal

நாத்தாண்டிய பிரதேசத்தில் 30 சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எம்.யூ.எம்.சனூன்

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய, குறைந்த வருமானம் கொண்ட சமூர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணத் தொகுப்புகளை வழங்கும் ஒரு சிறப்புத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மற்றொரு அங்கமாக நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 30 பயனாளிகளின் வாழ்வாதாரத்தையும், சுயதொழிலையும் மேம்படுத்துவதற்காக, அத்தியாவசிய உபகரணத் தொகுதிகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

மக்களுக்கு நிதி ரீதியாக வலுவூட்டி, ஒரு நிலையான பொருளாதாரத்தை உருவாக்கும் இந்தப் பெருமைமிக்க நிகழ்வில், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக, அவரது செயலாளர் நிலங்க நாரங்கொட, நாத்தாண்டிய பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மானியச் சார்பு நிலைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களைத் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வலிமையான தொழில் முனைவோராக மாற்றும், மக்கள் நலன் சார்ந்த, உண்மையான அபிவிருத்திப் பயணத்தை நோக்கி அரசாங்கம் பயணித்து வருகிறது.
















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال