JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் 2027 ம் ஆண்டிற்கான புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகத் தேர்வு.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் அரபுக் கல்லூரி கடந்த 55 வருடங்கள் வரலாற்றைக் கொண்டதுடன் இதுவரை சுமார் 200 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது. மேற்படி மத்ரஸாவிற்கு 2027 ம் ஆண்டின் புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 2026 நவம்பர் மாதம் 10 ம் திகதிக்கு முன் மதுராவிற்க்கு அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.

அதன்படி அல்குர்ஆன் மனனப் பிரிவிற்கு தரம் 05 அல்லது 06 ல் கல்வி கற்ற 12 வயதிற்குட்பட்ட மாணவர்களும் இஸ்லாமிய கற்கை (ஷரீஆ) பிரிவிற்கு தரம் 08 அல்லது அதற்கு மேல் கல்வி கற்ற 13 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களும் சேர்த்து கொள்ளப்பட உள்ளதாக கல்லூரி அதிபர் எம் ஏ பீ எம் முபாஸில் (உஸ்மானி) தெரிவித்துள்ளார்.

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் சேவைகளாக புனித அல்குர்ஆன் மனனம், இஸ்லாமிய கற்கைகள், க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை, அஹதிய்யா சான்றிதழ் பரீட்சை, அல் ஆலிம் சான்றிதழ் பரீட்சை, தீனிய்யாத் சான்றிதழ் பரீட்சை, தகவல் தொழில்நுட்பம் என்பவற்றுடன் அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது ஆகிய மொழிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும் 2027 ம் ஆண்டின் புதிய மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தோருக்கு 2026/11/14 ம் திகதி சனிக்கிழமையும் வெளி மாவட்ட மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு 2026/11/15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரி மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும் மேலதிக தகவல்களுக்கு 071 970 9250 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அதிபரை தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال