JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னாரில் இராணுவத்தினர் பயணித்த டிபென்டர் வாகனம் விபத்து - இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் படுகாயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கிளியன்குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைமன்னார் வீதியினூடாக மன்னார் நோக்கி இன்று மாலை இராணுவத்தினர் பயணித்த டிபென்டர் (Defender) ரக வாகனம், கிளியன்குடியிருப்பு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் போது வாகனத்தில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், உடனடியாகப் பேசாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த ஏனைய 11 இராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர், உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த விபத்தின் போது டிபென்டர் வாகனம் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..






1 Comments

  1. இலவச சாராயம் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் சாகாமல் வேறு என்ன நடக்கும்

    ReplyDelete
Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال