(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வும் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு - 2026 எதிர்வரும் 16ஆம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான முன்னாயத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் அவர்களின் தலைமையில் இன்று (9) புதன்கிழமை கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் முஷர்ரஃப் முத்துநபியீன், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எல்.முஸ்மி, காரைதீவு பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் பிரதேச இளைஞர் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.





