JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆலங்குடாவில் இடம்பெற்ற ECO INNOVATORS 2026 - சுற்றுச்சூழல் புத்தாக்குநர்கள் கண்காட்சியும் விழிப்புணர்வு நாடகமும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் மீள்சுழற்சி மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறுவர்களை வலுவூட்டுதல் எனும் கருப்பொருளில் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ECO INNOVATORS 2026 - சுற்றுச்சூழல் புத்தாக்குநர்கள் கண்காட்சியும் விழிப்புணர்வு நாடகமும் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் திட்டப் பணிப்பாளர் எச்.கே ரொஷான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கற்பிட்டி பிராந்திய முகாமையாளர் சுபுன் பீரிஸ் கலந்து சிறப்பித்ததுடன் விஷேட அதிதிகளாக ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.எச் ஏ. சகூர் , சுற்றுச் சூழல் ஆய்வாளர் எச் எம் சுகைப், வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விவசாய திட்ட இணைப்பாளர் டபள்யூ.எல் பெர்ணான்டோ, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துறை பொறுப்பதிகாரி எம் நிப்ராஸ், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள் நலன் விரும்பிகள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

சிறுவர் தலைமையிலான சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூகப் பங்கேற்பு படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் மீள்சுழற்சி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் முறையற்ற கழிவகற்றல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் இன்று சமூகங்கள், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒண்றாக மாறியுள்ளது என்பதனை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அமைந்த மேடை நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் கழிவுப் பொருட்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியும் அனைவரினதும் பாராட்டை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال