எம்.யூ.எம்.சனூன்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் திகழி அல் மதீனா முஸ்லிம் வித்தியாலயம் பெற்றுள்ள மாபெரும் வெற்றி, பாடசாலையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புமிக்க சாதனையாகும் என அதிபர் முர்ஷி தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில், எம்.எஸ். முப்தி அஹமத் 151, எம்.எம். அபா மனால் 141, எம்.ஏ. அப்துர் ரஹ்மான் 140, என்.பாத்திமா 139, எம்.எஸ்.அஸ்தா ஹிபா 137, எம்.இஸ்ஸா நதீஜா 135, எம்.ஐ.அய்யாஸ் அஹ்மத் 134, எம்.எப். ருக்கையா 132, ஏ. முஹம்மத் அஜ்மல் 131, எஸ்.சிப்கா 130 ஆகியோர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
பாடசாலையின் சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கும், வெட்டுப்புள்ளிக்கு மேலாக பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தமது பிள்ளைகளின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த பெற்றோர்களுக்கும், இரவு பகலாக மாணவர்களுக்காக உழைத்த ஆசிரியர் பெருந்தகைகளுக்கும்
தனது இதய பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வெற்றிக்குப் பின்னால் உள்ள தலைமைத்துவம், அதிபரை பற்றி திகழி முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் சுக்ரி தெரிவிக்கையில்,
திகழி அல் மதீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் முர்ஷி அவர்கள் 2026 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது நிர்வாகப் பணியின் ஆரம்ப கட்டத்திலேயே இவ்வாறான ஒரு பாரிய வெற்றியைப் பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பல ஆண்டுகள் புவியியல் பாடத்தில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றிய அவருடன் சக ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.
குறிப்பாக 2019–2021 காலப்பகுதியில் புவியியல் துறையில் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதையும், பல மாணவர்களை உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகப் பாதைக்கு வழி நடத்தியதையும் நேரடியாகக் கண்டவன்.
அவருடைய வழிகாட்டுதலின் மூலம் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்றமை அவரது கல்விப் பணியின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது.
அவருடன் நான் பணியாற்றிய காலத்தில், மாணவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் தனித்தனியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிப்பதில் அவர் காட்டிய அக்கறையை நான் நேரடியாகக் கண்டிருக்கின்றேன்.
அதே அணுகு முறையைத்தான் அல் மதீனா பாடசாலையின் அதிபராகவும் அவர் முன்னெடுத்து வருவதை இந்தப் பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன.
வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் என அனைவருடனும் இணைந்து ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்தையும் கண்காணித்து, தேவையான இடங்களில் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு, மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்திருப்பது இந்த வெற்றியின் முக்கியமான அடித்தளங்களில் ஒன்றாகும்.
புத்தளம் மாவட்டத்திலும், குறிப்பாக கல்பிட்டி பிரதேசத்திலும், அல் மதீனா பாடசாலையை தலை நிமிரச் செய்யும் ஒரு பெறுபேற்றை தனது முதல் முயற்சியிலேயே பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இன்றைய இந்தச் சிறிய வெற்றி, நாளைய மிகப்பெரிய சாதனைகளுக்கான முதல் படியாக அமையட்டும். அல் மதீனா பாடசாலையின் பெயர் கல்வித்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பெருமையுடன் ஒலிக்கட்டும் என புகழாரம் சூடியுள்ளார்.


