JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றும் கர்னல் Keith Miles உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக செவ்வாய்க்கிழமை (2026 செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்தார்.

இவ் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 27வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பொறுப்பேற்றமைக்காக, கடற்படை தளபதிக்கு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Keith Miles தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. 

மேலும், இவ் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படை தளபதிக்கும் கர்னல்  Keith Miles  இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال