(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம் இன்று (07) மாலை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வனர்த்தத்தினால் பிரதான கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பல ஓடுகள் கழன்று விழுந்துள்ளன. அதேபோன்று கூரைப் பகுதியின் மேற் பகுதியில் உள்ள ஓடுகளும் கழன்று விழுந்துள்ளன.
தற்பொழுது பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் அவசரமாக இதனை புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புனர்நிர்மாணம் தாமதமாகும் சந்தர்ப்பத்தில் வெள்ள அனர்த்தம் மற்றும் மழையின் காரணமாக வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு, இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இதனை புனர்நிர்மாணம் செய்வதற்கு ரூபாய் ஐந்து இலட்சம் பணம் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இப்பாடசாலையின் அவசர தேவை கருதி, சம்பந்தப்பட்டவர்கள் கரிசனை கொண்டு இப்பாடசாலையை புனர்நிர்மாணம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



