எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தில்லையடி சதாமியா புரம் பிரதான வீதி, நீண்டகாலமாக மக்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக காணப்பட்டு வந்தது.
மக்களுடைய அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இவ்வீதியின் புனரமைப்பிற்காக தேசிய மக்கள் சக்தி அரசினால் ரூபா 3.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் தெரிவித்தார்.
புனரமைப்புப் பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புணரமைப்பு செய்யப்படவுள்ள குறித்த சதாமியா புரம் பிரதான வீதியினை புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன், மேயரின் இணைப்பாளர் ஜஹாஸ் மற்றும் பிரதேச வாசிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.



