JobVibe.lk - Sri Lanka Job Portal

பள்ளம வெந்தக்கடுவ மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு.

எம்.யூ.எம்.சனூன்

வளமான நாடு, அழகான வாழ்க்கை திட்டத்தின் கீழ் பள்ளம வெந்தக்கடுவ மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்கியுள்ளது. 

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் புத்தளம் மாவட்ட பொறுப்பாளருமான  எம்.ஜே.எம். பைசல் தலைமையில் இன்று (16.09.2026) புதன்கிழமை இந்த குடிநீர் வழங்கும் நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆனமடு பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, உப தலைவர் இமல்கா தில்ஷான், ஆனமடு பிரதேச சபை உறுப்பினர் சகுன் மஞ்சநாயக்க, பள்ளம பிரதேச செயலாளர், நீர் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட பிரதான அலுவலக பொறுப்பு அதிகாரி நிஷாந்த ஹேரத், சமூக நீர் திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர் ரனவீர, பள்ளம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வெந்தக்கடுவ கிராம உத்தியோகத்தர், அரச அதிகாரிகள், பிரஜா சக்தி தலைவர், சமூக நீர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 250 குடும்பங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நிரந்தரத் தீர்வு வழங்கப்படவுள்ளது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال