JobVibe.lk - Sri Lanka Job Portal

நெலும் பொக்குன உப புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கி பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு.

  எம்.யூ.எம்.சனூன்

புகையிரத போக்குவரத்தை மேலும் திறமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு திட்டமாக, சிலாபம் மாதம்பை நெலும் பொக்குன உப புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கி பொதுமக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (19) இடம்பெற்றது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

3.5 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்த உப புகையிரத நிலையம், சில காலமாக குறைந்த பட்ச வசதிகளுடன் பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது.

இந்நிலையத்தின் நவீனமயமாக்கலுக்காக பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளைத் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளனர். 

மேலும், இவ்விடத்தை மக்கள் விரும்பும் ஓர் கவர்ச்சியான தலமாக மாற்றும் நோக்கில் அன்று மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போது,

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இவைகள் மூடப்படும் என்ற ஒரு கருத்து இருந்தது. இவை மட்டுமல்ல, எங்களைப் பற்றி வேறு பல விடயங்களும் கூறப்பட்டன. தலதா பெரஹெரா அனுமதிக்கப்படாது என்று கூறினார்கள். பௌத்த நிலையங்கள், பள்ளிகள் அழிக்கப்படும் என்றும் கூறினார்கள். எனவே, இத்தகைய பெரிய விடயங்கள் கூறப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஒரு ரயில் நிலையத்தை மூடுவது பற்றிய ஒரு கதையைப் பரப்புவதை நாங்கள் ஒரு மிகச் சிறிய விஷயமாகவே காண்கிறோம். இருப்பினும், நாங்கள் அவை அனைத்திற்கும் ஏற்கனவே பதிலளித்துவிட்டோம் எனக்கூறினார். 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, ஹிருனி விஜேசிங்க, மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே திணைக்கள அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال