(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் பதினொரு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.வை. ஹுதைபா தெரிவித்தார்.
அதன்படி எம். ஹம்தி அஹ்மத் -162, எம்.ஐ.உமைர் -154, எம்.எல்.எல். ஸைனப் - 149, எம்.எஸ்.சமாயில் - 146, எம்.எஸ்.எம். அதியான் - 144, எம்.ஐ. உமைர் 141, எம்.எஸ். அலைனா - 141 எம்.அஸ்மன் - 140, எம்.சஹீட் - 134, எம்.ஐ.எப். இக்ரா - 134, எம்.எஸ்.எப். சுஹா மனால் - 132 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் சார்பாக அதிபர் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாடசாலையின் பிதாவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா கருத்து தெரிவிக்கையில்,
மாணவர்களின் இந்த வெற்றிக்கு பின்னணியில் இருந்து வழிகாட்டிய அதிபர், ஆசிரியர் பெருந்தகைகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், பெற்றோர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
