JobVibe.lk - Sri Lanka Job Portal

மாதம்பை அல்-மிஸ்பாஹ்வின் மீலாத் தின சிறப்பு நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன் 

அகிலத்தின் அருட்கொடையாக விளங்கும் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறப்பையும், அவர் உலகிற்கு வழங்கிய மனித நேய போதனைகளையும் நினைவு கூறும் வகையில் மாதம்பை அல் மிஸ்பாஹ் பாடசாலையில் மீலாத் நபி சிறப்பு நிகழ்வுகள் (01) திங்கட்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மாதம்பை ஜும்ஆ பள்ளி நிர்வாகத் தலைவர் எம்.ஏ.எம்.அரபாத் மற்றும் சிலாபம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்  எம்.ஐ.தஹ்லான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலைக்கென பிரத்தியேக முஸ்லிம் மஜ்லிஸ் கழகமொன்று உருவாக்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பை பாடசாலை முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال