(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
"கிளீன் ஸ்ரீ லங்கா" செயலகமும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்யும் ‘தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்’ தேசிய திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களின் தொடர் வியாழக்கிழமை (2026 செப்டம்பர் 24) வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையப்படுத்தி நடத்தப்பட்டது.
இதற்கமைய, வடக்கு கடற்படை கட்டளையால் புங்குடுதீவு ஊரத்தீவு கடற்கரை, வெற்றிழைக்கேணி அலியாவளை, கல்முனை மற்றும் விநாயசோடி கடற்கரைகள் ஆகிய இடங்களிலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையால் அம்பாறை ஆறுகம்பை கடற்கரையை மையப்படுத்தியும் இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் ஏனைய தரப்பினருடன் இணைந்து கடற்படையினரின் சமூக சேவைப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.








