JobVibe.lk - Sri Lanka Job Portal

தலைமன்னார் கடல் பகுதியில் வழிதவறிய மேலும் மூவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (2026 செப்டம்பர் 05) தலைமன்னானுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, வழிதவறிய மேலும் மூன்று நபர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததுடன், இவர்களும் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒரு (01)  தந்தையும் அவருடைய 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் (02) அடங்குவர். 

இந்த நடவடிக்கையுடன் சேர்த்து, கடற்படையினரால் இன்று ஒரு நாளில் 5 சிறுவர்கள், 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட மொத்தம் 11 நபர்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்துள்ளது. 

குறித்த நபர்களும் மேலதிக சட்ட மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال