JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் முப்படைகள் இணைந்து 2026 செப்டம்பர் 14 முதல் 19 வரை நடைமுறைப்படுத்திய தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு இலங்கை கடற்படை கட்டளை மட்டத்தில் தனது பங்களிப்பை வழங்கியது. 

அதன்படி, நிலவும் வானிலை நிலவரத்திற்கு மத்தியில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்படக்கூடிய 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இதன் கீழ் கொழும்பு, கண்டி, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புத் திட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்ட கடற்படையினர் கலந்துகொண்டனர்.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال