(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரிக்கு யெமன் நாட்டின் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் (அல் யெமனி) புதன்கிழமை (16) விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ரஹ்மாய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் எம் ஏ.பி.எம் முபாசில் (உஸ்மானி) தலைமையில் வரவேற்கப்பட்ட யெமன் நாட்டு மார்கக அறிஞர் கல்லுரியின் விருந்தினர் பதிவேட்டிலும கையெழுத்திட்டார்.
கல்லூரியின் கல்வி மற்றும் மாணவ செயல்பாடுகளை பார்வையிட்ட அவர், மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல் உரை ஒன்றையும் ஆற்றியதுடன், மாணவர்களின் எதிர்கால மார்க்கச் சேவைகளுக்கா பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்
இவ் விஜயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொருளாளர் கலாநிதி ஏ. ஏ. அஸ்வர் அஸாஹிம் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.


