எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலக பிரிவின் அட்டவில்லு, பாலாவி மற்றும் தில்லையடி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வதியும் தலா ஒவ்வொரு வரிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அரசாங்க நிதியுதவியுடன் அமைத்து கொடுப்பதற்காக, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் அவர்களால் (06) ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிகழ்வுகளில் புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன், தேசிய மக்கள் அரசாங்கத்தின் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதார புத்தளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் எம்.என்.எம்.ஜஹாஸ், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர் கித்சிரி, அட்டவில்லு பிரஜா சக்தி தலைவி அஞ்சுல, போதிராஜபுர தலைவர் திவங்க ஜினோஸ், பாலாவி தலைவி மாரி, தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளும் மற்றும் அரச உத்தியோகத்தர்களும், வீட்டுதிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.










