JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை கடற்படை நெடுந்தீவு அபிவிருத்திப் பணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நெடுந்தீவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, கடல் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினரால் 2026 செப்டம்பர் 06 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நெடுந்தீவை நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நெடுந்தீவின் குடிநீர் விநியோகம், வீதிகள் அமைத்தல், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

அதற்கமைய, குறித்த திட்டத்திற்குத் தேவையான பாரிய அளவிலான இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை காங்கேசன்துறை துறைமுகத்தியிலிருந்து நெடுந்தீவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக இவ்வாறு கடல் போக்குவரத்து வசதிகள் வழங்கும் நடவடிக்கை வடக்கு கடற்படைக் கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது.  

மேலும், கடற்படையினரால் இவ்வாறு வசதிகள் வழங்கப்பட்டமையின் ஊடாக, நெடுந்தீவின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமை கிடைக்கும்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال