JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி முசல்பிட்டி முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் 70 வது அகவையில்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டிக் கோட்டத்துக்குட்பட்ட  முசல்பிட்டி முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் வியாழக்கிழமை (10) தனது 69 வது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்துள்ளதுடன்  70 வது ஆண்டில் தடம் பதித்துள்ளது. 

இப்பாடசாலையின் உருவாக்கத்துக்கு எஸ் எஸ் மரைக்கார், அசனா மரைக்கார், மற்றும் முஹைதீன் போன்றோர் காரணகர்தாக்களாக இருந்துள்ளனர்.

எம். சேகுநெய்னா, எஸ். இப்ராஹிம், எஸ். அனிபா, கே. முத்துரைக்கார் ஆகியோர் இணைந்து பாடசாலைக்கான காணியை இலவசமாக வழங்கியுள்ளனர். 

பாடசாலையின் மாணவர் பதிவு 1957.09.11 அன்று இடம்பெற்றுள்ளது  முகம்மது தவ்பீக் முதலாவது மாணவராகப் பதிவுசெய்யப்பட்டுள்ளார்.

36 ஆண்களும் 29 பெண்களும் என மொத்தம் 65 மாணவர்களுடன் எம் எம் எம் இப்ராஹிம் அவர்களை அதிபராகக் கொண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முசல்பிட்டி முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் தற்போதைய அதிபராக என் எம் நஸூர் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال