(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
2026 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ செயலகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட காலி, உனவட்டுன “Jungle Beach” கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் முன்னோடித் திட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை,( 2026 செப்டம்பர் 27)தெற்கு கடற்படைக்கட்டளையினால் சமூகப்பணிப் பங்களிப்பு வழங்கப்பட்டது.
அதற்கமைய, 2026 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ருஹுணு சுற்றுலாப் பணியகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழகான, சுத்தமான கடற்கரையைப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட ‘மிஹி சுறெக்கும் பியச’ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சுத்திகரிப்பு முன்னோடித் திட்டத்தின் மூலம், “Jungle Beach” சூழலமைப்பிலும் அதன் கடற்கரைப் பகுதியிலும் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகளைச் சேகரித்து, முறையான வகையில் அகற்றுவதற்குக் கடற்படையினர் ஏனைய தரப்பினருடன் இணைந்து தமது பங்களிப்பை வழங்கினர்.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் திரு. நலின் உள்ளிட்ட அரச அதிகாரிகள், ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ திட்டத்தின் அதிகாரிகள், தெற்கு கடற்படைக்கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா உள்ளிட்ட முப்படைச் சார்ந்த வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.












