JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்பிட்டியில் 05 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

தித்வா புயல் காரணமாக கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை முழுமையாக மீள கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (12) சனிக்கிழமை  வன்னி முந்தல் கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம்.பைசலின் தலைமையிலும், வன்னிமுந்தல் பிரஜா சக்தியின் சமூக மேம்பாட்டு சபை தலைவர் அஸ்வர் அலியின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச செயலக அரச ஊழியர்கள், அரச உத்தியோகத்தர்கள், கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள்,

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال