JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மிஹிந்தலையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சகத்தின் முன்முயற்சியின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் கடற்படையின் தொழில்நுட்பப் பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை பிரதேச செயலகம், வெள்ளரகம கட்டுகெலியவ கிராமம், எண் 580 இல் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை (2026 ஆகஸ்ட் 05 )திறந்து வைக்கப்பட்டது. 

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சார் பங்களிப்புடனும், சுகாதார அமைச்சின் தலைமையிலும், ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பங்களிப்புடனும் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் சேர்த்து, கடற்படையினரால் 1159 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் உரிமையாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் உரிமையாக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம், மிஹிந்தலை கடுகெலிய கிராமத்தைச் சேர்ந்த பெருமளவானோரின் சுத்தமான குடிநீர்த் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். 

மேலும், இலங்கை கடற்படையானது தூய்மையான குடிநீர் வழங்கும் இந்த சமூக சேவைக்குத் தொடர்ந்து பங்களிக்கும்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال